திடீரென நாவற்குழிக்கு அழைத்து செல்லப்பட்ட செவ்வந்தி! சுற்றிவளைக்கப்படும் ஜே.கே பாயின் தொடர்புகள்
நாட்டில் கடந்த சிலவாரங்களாகவே போதை பொருளுடன் தொடர்புடையவர்களும் அவர்களை பற்றிய செய்திகளுமே தற்போதுவரை பேசுபொருளாகியுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டநிலையில் தற்போது வரை பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன.
தமிழர் பகுதி
தென்னிலங்கையில் எந்த குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அந்த விடயங்கள் தமிழர் பகுதியில் வந்து முடிகின்றன.
அந்தவகையில் இந்தவிடயத்திலும்,யாழை சேர்ந்த ஜே.கே பாய் மற்றும் ஆனந்தன் என்போர் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நாவற்குழியருகேவுள்ள ஜே.கே பாயின் வீட்டினருகே செவ்வந்தி வருகை தந்துள்ளதை அயலவர்கள் அவதானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வீட்டினருகேவுள்ள சிசிடிவி காணொளி காட்சிகளை புலனாய்வுஅதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.