இலங்கையின் தொலைத்தொடர்பு துறையில் கால்பதிக்க தயாராகும் இந்திய நிறுவனம்
இந்தியாவின் ஜியோ பிளாட்ஃபோர்ம்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம், இலங்கை அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சிறிலங்கா டெலிகொமின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடியில் உள்ள இலங்கை அரசாங்கம் பணத்தை திரட்டுவதற்காக பொருளாதாரத்தின் பல துறைகளை தனியார் மயமாக்க முனைகிறது.
இந்தநிலையில கடந்த நவம்பர் 10 முதல் இலங்கை அரசானது தனக்கு சாத்தியமான முதலீட்டாளர்களின் முன்மொழிவுகளுக்கு அழைப்பு விடுத்தது.
மூன்று சாத்தியமான ஏலதாரர்கள்
இதன்படி ஜனவரி 12 ஆம் திகதி காலக்கெடுவுக்குப் பிறகு, இலங்கை அரசாங்கம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் ஜியோ பிளாட்ஃபோர்ம்ஸ், கோர்ட்யூன் இன்டர்நேசனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் மற்றும் பெட்டிகோ கொமர்சியோ இன்டர்நேசனல் எல்டிஏ ஆகிய மூன்று சாத்தியமான ஏலதாரர்களாக பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், ஜியோ பிளாட்ஃபோர்ம்ஸ் நிறுவனத்தின்(jio) தலைவர் முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு அங்கமாக இதனை பயன்படுத்துவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து அமைச்சரவை இந்த ஏலதாரர்கள் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்ளும் என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
