வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு
வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா, கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.
இச் சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தலைமையில் உப பொலிஸ் அதிகாரி எல்.எஸ்.வீரசிங்க, பொலிஸ் கொஸ்தாபிள்களான நிரோஜன் (8137), தீபன் (80998) அடங்கிய குழுவினரால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
35 பவுண் நகை
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா, கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 35 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேக நபரினை நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri
