சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் தொடர்பில் குற்ற விசாரணை பிரிவின் அறிக்கை
பௌத்த மதம் தொடர்பில் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மத போதகர், ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் குற்ற விசாரணை பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத போதகர் ஜெரோம் அல்லது அவரது குடும்பத்தின் உறுப்பினர்கள் எவரும் நிதிச் சலவை சட்டத்தின் பிரகாரம் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மத போதகர் ஜெரோம் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக நிதிச் சலவை குற்றச்சாட்டின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என குற்ற விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது.
முறைப்பாடு தொடர்பில் விசாரணை
ஊழல் மோசடிகளுக்கு எதிரான மக்கள் சக்தி என்ற அமைப்பினால் மத போதகர் ஜெரோமிற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பகுதியில் காணப்படும் மிரக்கல் டோம் என்ற மத நிலையத்தை நிர்மாணம் செய்வதற்கு நபர் ஒருவர் பரிசாக காணி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத போதகர் ஜெரோம் நிதிச் சலவையில் ஈடுபடுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |