ஈரான் தூதரகத்திற்கு சென்ற ஜீவன் தொண்டமான்
கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு சென்ற நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்றையதினம் (27) இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த வாரத்தில் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று, தூதுவரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, விசேட நினைவுக்குறிப்பேட்டில் தனது அனுதாபச் செய்தியையும் பதிவிட்டார்.
மேலும் ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட பலரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைந்தோம் என்றும், விசேடமாக இலங்கைக்கும் எம்மோடு தொடர்புடைய பிராந்தியத்துக்கும் அவர்களின் இழப்பு பாரிய என்றும் தெரிவித்தார்.
அத்தோடு ஈரானும் இலங்கையும் நெடுங்காலமாக நட்போடு திகழ்கின்றன. இலங்கையின் அபிவிருத்திக்கு அவர் பல ஒத்துழைப்புகளை நல்கியுள்ளார்.
விசேடமாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கு ஈரான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியது. இதை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம் எனவும் ஈரான் தூதுவரிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |