பெருந்தோட்ட மக்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டங்களை கைவிட்டுமாறு ஜீவன் அறிவிப்பு
பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிரான வேலைநிறுத்த போராட்டங்களை கைவிட்டு நாளை(26) முதல் தொழிலுக்கு செல்லுமாறு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman)தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றிலேயே இதனை கூறியுள்ளார்.
அடையாள வேலை நிறுத்தம்
ஊடக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“பெருந்தோட்ட நிறுவனம் ஒன்றின் கீழ் இயங்கும் நானுஓயா உடரதல்ல தோட்டத்தில் கடந்த மே மாதம் தேயிலை காணியில் கோப்பி பயிரிடப்பட்டதை எதிர்த்து தோட்ட முகாமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூன்று தலைவர்களையும் தோட்ட நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது.
இந்தவிடயம் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து உடனடியாக நான் களத்திற்கு சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் குறிப்பிட்ட தோட்ட முகாமையாளரினால் எனக்கெதிராக வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக சந்தேக நபர்களை நீதி மண்றத்தில் முன்னிலையாகுமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக கேள்வியுற்று அனைத்து பொது மக்கள் சார்பாகவும் குறிப்பிட்ட பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக தொடர்ச்சியாக அடையாள வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டு வருகின்றீர்கள்.
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அனைவரும் போராட்டங்களை கைவிட்டு நாளை முதல்(26) தொழிலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இதுவரை காலமும் போராட்டங்களை மேற்கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, உடரதலை தோட்டத்தினை நிர்வகிக்கும் பெருந்தோட்ட நிறுவனத்தியின் செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
