புலம்பெயர் தொழிலாளர்களுக்கு "ஜயகமு ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம்
நாட்டின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை தேசிய வேலைத்திட்டம் கடந்த 26 ,27 திகதிகளில் இரத்தினபுரி முத்துவ விளையாட்டரங்கில் நடைபெற்றது.
அதனடிப்படையில் வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்களின் 500 பிள்ளைகளுக்கும், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களின் 20 பிள்ளைகளுக்கும் பாடசாலை உபகரணங்களுடன்,பாடசாலைப் பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பி வெற்றிகரமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் பணப்பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
வெளிநாட்டில் தொழில் புரிந்துவிட்டு நாட்டில் சுயதொழிலில் ஈடுபடும் 16 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபா பண உதவி வழங்கப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பை கௌரவித்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இரண்டு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.
இதேவேளை புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவருக்கு வீடு கட்டுவதற்கு முதல் தவணையாக எழுபத்தைந்தாயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது.
மேலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் பல தடவைகள் பதிவு செய்து வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற 28 பேருக்கு சதொச வவுச்சர்களும் .தரம் ஐந்து புலமைப்பரிசில் ,கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் , உயர்தரம் பரிட்சையில் சித்தி பெற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் 53 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளுக்கு Smart Class Room அமைக்க 18 ஸ்மார்ட் போர்டுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |