கண்ணிவெடியகற்றும் நிறுவனத்திற்கு ஜப்பானிய தூதரக பிரதிநிதிகள் விஜயம்
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பானிய தூதரக பிரதிநிதி குறுக்கோவா எறிக்கோ( KURUKAWA ERIKO) ஹிசாகி சுமுறா( HISASHI TSUMURA) ) மற்றும் ஜனனி கந்தையா ஆகியோர் முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடியகற்றப்பட்டு கையளிக்கப்பட்ட பிரதேசங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்றுமுன்தினம் (10) விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பானிய தூதரக பிரதிநிதி குறுக்கோவா எறிக்கோ( KURUKAWA ERIKO ) ஹிசாகி சுமுறா( HISASHI TSUMURA) ) மற்றும் ஜனனி கந்தையா ஆகியோர் மனிதாபிமான கண்ணி வெடியகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் ஸார்ப் நிறுவன அலுவலகம் மற்றும் முகமாலை கண்ணிவெடியகற்றி கையளிக்கப்பட்ட பிரதேசங்களின் தற்போதைய முன்னேற்ற நிலை பிரதேசதளம் என்பவற்றை மேற்பார்வையிட்டுள்ளனர்.
கண்ணிவெடியகற்றும் பணி
இதன் போது கண்ணிவெடியகற்றப்பட்டு கையளிக்கப்பட்ட பிரதேசங்கள் தற்போது வேலை நடைபெறும் பிரதேசங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்; தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப் நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2025 செப்ரெம்பர் மாதம்; 10ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தச்சடம்பன் அம்பகாமம் ஒழுமடு மற்றும் மாங்குளம் கொக்காவில் பகுதியிலும்; புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதியிலும்; கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் கிழாலி இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் கண்டாவளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதியிலும் முப்பத்தைந்து இலட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து நாற்பது சதுரமீற்றர் பரப்பளவில் (3553040) இருந்து எண்பதாயிரத்து நூற்று எழுப்த்துநான்கு(80174) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
தற்போது நான்கு அணிகள்; கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது












அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
