கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகள் (PHOTOS)
கிளிநொச்சி - முகமாலை பகுதியில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளனர்.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு முகமாலை அல்லிப்பளை பகுதியில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் சார்ப் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்படி கண்ணிவெடி அகற்றும் பணிகளை இன்றைய தினம் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன், வெடி பொருள் அகற்றலில் இருக்கின்ற தாமதங்கள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டுள்ளனர்.
குறித்த சந்திப்பானது இன்று (02-02-2022) பகல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







