சர்வதேசத்தை திரும்பி பார்க்கவைத்த ஜப்பான்! ரெயில்கன் திட்டத்தில் வெற்றி
அமெரிக்கா தோல்வியுற்ற ரெயில்கன் திட்டத்தில் ஜப்பான் வெற்றி வெற்றிபெற்றுள்ளமையானது சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் டோக்கியோவில் Railgun ஆயுதம் ஜப்பானால் முதல் முறையாக வெளியிடப்பட்டது.
உலகத் தரத்தில் முன்மாதிரியாக விளங்கும் அமெரிக்கா 2021இல் தோல்வியடைந்த ரெயில்கன் திட்டத்தில், ஜப்பான் வெற்றிகரமாக முன்னேறியுள்ளது.
தற்போதைய டோக்கியோ அருகே நடைபெற்று வரும் DSEI Japan பாதுகாப்பு கண்காட்சியில், ஜப்பான் உருவாக்கிய High-Power Railgun ஆயுதம் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு, தற்காப்பு உள்பட பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வெளிப்படையாகக் காட்சிப்படுத்துவதை தவிர்த்து வந்தது.
ஆனால் இப்போது, ரெயில்கன் உள்ளிட்ட பல உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை கண்காட்சியில் அறிமுகப்படுத்தி அந்த நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
ரெயில்கன் (Railgun) என்பது என்ன
ரெயில்கன் எனபது, மரபணு வெடிபொருட்கள் இல்லாமல், தூண்டுதல் மின்னொட்டின் (electromagnetic force) மூலம் உலோக பந்தை Mach 5 வேகத்தில் (அதாவது ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிகம்) பாய்ச்சி இலக்கை சேதப்படுத்தும் தொழில்நுட்பமாகும்.
வெடிப்பு இல்லாமல், வெறும் வேகத்தின் மூலமே இலக்கை அழிக்கக்கூடிய சக்தி கொண்டது.
அமெரிக்கா தோல்வி
அமெரிக்கா 10 ஆண்டுகள் 500 மில்லியன் டொலர் செலவிட்டு முயன்றும், பல தொழில்நுட்ப தடைகள் காரணமாக திட்டத்தை கைவிட்டது.
மின்னழுத்த தேவையின் அளவு, உலோக ரெயில்களின் குலுங்கள் மற்றும் வழிகாட்டும் (navigation) தொழில்நுட்பக் குறைபாடுகள் ஆகியவை முதன்மையான காரணங்கள் ஆகும்.
எனினும் ஜப்பான் 2016-ஆம் ஆண்டு ரெயில்கன் திட்டத்தை தொடங்கியது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 300 மில்லியன் டொலரை முதலீடு செய்துள்ளது.
தற்போது கடலோர பாதுகாப்பு கப்பலில் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது கண்காட்சியில் வெளியிட்டிருப்பது, தொழில்நுட்ப மேம்பாடு மீது ஜப்பானின் நம்பிக்கையை காட்டுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
