ஜப்பானில் தொழில்! கொழும்பில் பெரும் மோசடி செய்த பெண்ணின் வீட்டை சுற்றி குவிந்த கூட்டம்
ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பெருந்தொகை பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக தலங்கம பகுதியில் ஒரு சொகுசு வீட்டுக்கு முன் சிலர் இன்று (16.02.2026) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜப்பான் நாட்டில் தொழில் பெற்று தருவதாக தலங்ககமவைச் சேர்ந்த மெலொனி சுதர்மிக்கா என்ற பெண் பலரை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் மாமனார் தலங்கம பிரதேச சபைக்கு தேசிய மக்கள் சக்தியில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டி ஈட்டுள்ளார் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு இளைஞர் தெரிவித்துள்ளார்.
ஒருவரிடம் 35 இலட்சத்துக்கு மேல் பணம் மோசடி
இந்த பெண் பலரிடம் 35 இலட்சத்துக்கு மேல் பணத்தை பொற்றுக் கொண்டு ஜப்பானில் தொழில் இருப்பதாக கூறி விசாவும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த விசாக்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பரீட்சித்து பார்த்த போது இவை போலியானது என்றும் அவ்வாறான எவ்வித தொழில் வாய்ப்புகளும் வழங்கவில்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் பணத்தை திருப்பி கேட்டால் தரமால் வழக்கு பதிவு செய்யுமாறு சொல்லுகிறார். சிலர் சட்டத்தரணி ஊடாக பணம் பெற்றுக் கொடுத்துள்ளதால் வழக்கு பதிவு செய்ய தயங்குகின்றனர்.
சிலர் வழக்கு பதிவு செய்துள்ளனர், ஆனால் குறித்த பெண் வழக்குக்கு வருதில்லை.வழக்கு தள்ளிப் போகிறது என்ன வென்று தனக்கு தெரியாது என்று ஒரு பெண் குறிப்பிட்டார்.
2023-2024 ஆம் ஆண்டுகளிலும் நிறுவனம் ஒன்றை நடத்தி பலரை ஏமாற்றியதாகவும் திணைக்களத்தில் இவருக்கு 40 க்கு மேற்பட்ட முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இப்போதும் 'ஜொக்கி ஜபனீஸ்' என்ற நிறுவனத்தின் ஊடாகவே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.எங்களை தொழிலில் இருந்து விலகுமாறும் கட்டாயம் ஜப்பான் போகலாம் என்று சொன்னார்.
இப்போது தொழிலும் இல்லை பணமும் இல்லாமல் நட்டாட்டில் விடப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.