க்ளீன் ஸ்ரீ லங்காவுக்கு ஜப்பான் வழங்கிய உதவி
‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் கீழ் கழிவு முகாமைத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம், இலங்கைக்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் அதாவது 565 மில்லியன் ரூபாய்களை மானியமாக வழங்கியுள்ளது.
இந்த மானியத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் ஜப்பானின் வெளியுறவுத்துறை நாடாளுமன்ற துணை அமைச்சரும் நிதியமைச்சகத்தின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கையெழுத்திட்டனர்.
ஜப்பான் அரசாங்கத்தின் விருப்பம்
இந்த மானியம் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூர் அரசாங்கங்களின் கழிவு முகாமைத்துவ திறனை மேம்படுத்தவும், 28 குப்பை அமுக்கிகளை கொள்வனவு செய்வதற்கும், நாட்டின் கழிவு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
இந்தநிலையில், தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் நாட்டின் உலகளாவிய முதலீட்டு ஈர்ப்பை ஈர்த்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சயாமா தெரிவித்துள்ளார்.
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பரந்த நிர்வாக சீர்திருத்தங்களில் இலங்கைக்கு தொடர்ந்து உதவ ஜப்பான் அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |