ஜப்பானிய பிரதமரிடம் இருந்து ரணிலுக்கு அனுப்பப்பட்ட கடிதம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜப்பானிய பிரதமர் வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது,
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரணில் தலைமையின் கீழ் விரைவான முன்னேற்றம்
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மற்றும் கடன் மறுசீரமைப்பு மற்றும் அனைத்து கடன் வழங்குநர்களிடையே நியாயமான சுமை பகிர்வு ஆகியவற்றுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் விரைவாக முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
"சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்" ஒன்றை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் குறிப்பிடுள்ளார்.
மே 9 கலவரம்! இராணுவத்திற்கு உத்தரவிட விரும்பாத கோட்டாபய |