இலங்கையர்களுக்கு தடை விதித்த ஜப்பான்
இலங்கை உட்பட ஆசிய பிராந்தியத்திற்குட்பட்ட 11 நாட்டவர்கள் ஜப்பானிற்குள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அந்த நாட்டு எல்லை கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜப்பான், டோக்கியோ, ஓஸாகா உட்பட நகரங்கள் சிலவற்றிற்கு அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மேலும் சில நகரங்களுக்கு அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை, தாய்வான், தாய்லாந்து, ஹொங்கொங், சிங்கபூர், மலேசியா, வியட்நாம், தென்கொரியா மற்றும் சீனா உட்பட நாட்டவர்கள் ஜப்பானிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் வர்த்தக பயணிகளுக்கு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை குறித்த தடை அமுலாகாதென குறிப்பிடப்படுகின்றது.
ஜப்பானில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிணக்கை 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியுள்ளது.