ஜப்பானை அதிர வைத்த சம்பவம்!திடீரென மாயமான ஹெலிகாப்டர்
ஜப்பானின் தெற்கு பகுதியான மியாக்கோ தீவில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது.
குறித்த ஹெலிகாப்டரில் 10 இராணுவ வீரர்கள் பாதுகாப்புத் துறை சார்ந்த பணிக்காக மியோக்கோ தீவருகே சென்றுள்ளனர்.
இதன்போது 10 இராணுவ வீரர்களுடன் ஹெலிகாப்டர் திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொடர்பு துண்டிப்பு
ஹெலிகாப்டரிலிருந்து வரும் ரேடார் சிக்னல் கிடைக்காமல் இருந்திருக்கிறது.இதனை தொடர்ந்து ஹெலிகாப்டரை தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்நிலையில் ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர காவல் படையின் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு ரோந்து கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டரிலுள்ள நான்கு தகவல் தொடர்பு சாதனங்கள் இருந்தும் கூட அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஜப்பான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
