இலங்கையின் நெருக்கடி தீவிரம்! இந்தியாவின் அடுத்த நகர்வு!
இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து, அந்த நாட்டின் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு ஜூன் 18ஆம் திகதியன்று விளக்கமளிக்கவுள்ளார்.
இந்த ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஜெய்சங்கரைத் தவிர, இந்திய வெளியுறவுச் செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள விடயங்கள் தொடர்பிலும் கருத்தாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியும் உள்ளடக்கம்
இந்த சந்திப்பின் போது, பொருளாதார நெருக்கடி மற்றும் அண்டை நாடுகளின் கொள்கை மற்றும் புதுடில்லி கொழும்புக்கு எப்படி, என்ன மாதிரியான உதவிகளை வழங்கியது என்பது குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சிவசேனா ராஜ்யசபா உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, திமுக ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா, பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ராஜ்தீப் ராய் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்திய - இலங்கை முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்கள் இன்று!



