நாடாளுமன்றத்தில் கண்ணீர் வடித்த எதிர்ககட்சி எம்.பி
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது குடும்பத்துக்கு நேர்ந்த அநீதி குறித்து நேற்றையதினம்(22) நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க உரையாற்றியுள்ளார்.
சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட வாகனமொன்றைத் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜகத் விதான எம்.பி.யின் புதல்வன் ரசிக விதான கடந்த வெள்ளிக்கிழமை பாணந்துறை வலான மோசடித் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தமக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரும் அநீதி என்று ஜகத் விதான எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
பிணை கிடைப்பது சாத்தியமற்ற விடயம்
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித்த அபேகுணவர்த்தனவின் புதல்வியிடம் இருந்து குறித்த வாகனத்தை கொள்வனவு செய்ததாகவும், அது சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட வாகனம் என்பது குறித்து தமக்கு எதுவித தகவலும் தெரிந்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ரோஹித்த அபேகுணவர்த்தனவின் புதல்வி பொலிஸில் சரணடையும் வரை தனது புதல்வருக்கு பிணை கிடைப்பது சாத்தியமற்ற விடயம் என்று குறிப்பிட்ட அவர், அரசியல் ரீதியாக தன்னைப் பழிவாங்கும் நோக்குடன் தனது புதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
