முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கும் போதைப்பொருள் வியாபாரத்தில் தொடர்பு...!
கடந்தகால அரசாங்கத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் நேற்று(08.09.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த காலங்களில் போதைப்பொருள் பாவனை இந்த நாடு முழுவதும் வியாபித்து இருந்தது மட்டுமல்லாது அரசாங்கத்தினுடைய அனுசரணையுடனோ அல்லது குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளினுடைய ஒத்துழைப்போடு நடந்திருப்பதற்கான வாய்ப்பிருக்கின்றது.
சட்ட நடவடிக்கை
இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையும் காணப்பட்டிருந்தது. இதேவேளை, இளைஞர் யுவதிகள் தங்கள் வாழ்க்கையை தொலைத்துடன் எதிர்காலத்தை இழக்கும் நிலைக்கு ஆளாகும் வகையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இருந்தனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இது கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இது எதிர்கால சந்ததியினருக்கும் எதிர்கால இலங்கைக்கும் இருள் மயமான சூழலை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் எமது அரசாங்கம் இது தொடர்பான விசாரணையினை முன்னெடுத்துள்ளோம். அந்தவகையில், இதில் யார் ஈடுபட்டிருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுப்போம்.
அவர்கள், அரசியல்வாதிகளால் இருந்தாலும் சரி, அது யாராக இருந்தாலும் சரி, நாங்கள் கவலைப்படப்போவதில்லை”
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
