யாழில் பெண் ஒருவர் கைது - விசாரணைகள் தீவிரம்
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பொய்ட்டி பகுதியில் உயிர் கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் விசேட ரோந்து நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உபபொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபரான பெண்ணை கைது செய்துள்ளனர்.

சட்ட நடவடிக்கை
இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய குடும்ப தலைவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுக்க மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
May you like this Video
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 6 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam