யாழ். இந்திய துணைத் தூதுவர் நெடுந்தீவுக்கு விஜயம் (Photo)
யாழ். இந்திய துணைத் தூதுவரான ராகேஷ் நட்ராஜ், நெடுந்தீவுக்கு நேற்று (18.10.2022) விஜயம் மேற்கொண்டதாக யாழ். இந்திய துணைத்தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
யாழ். இந்திய துணைத் தூதுவர், கல்வி, பொது உள்கட்டமைப்பு பற்றி அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து நெடுந்தீவு பிரதேச செயலருடனும், சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கல்

இதேவேளை நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இந்திய புலமைப்பரிசில்பற்றி விளக்கமளித்ததோடு, மாணவர்களுக்கு பணப்பரிசில்களையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தீவகப்பகுதிகளில் சீன நாட்டினுடைய ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசப்படும் நிலையில் இந்தியத் துணைத்தூதரின் நெடுந்தீவு விஜயம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு நாளும் பரிசளிப்பு
விழாவிலும் இவர் கலந்து கொண்டுள்ளாமை குறிப்பிடத்தக்கது.
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam