யாழில் பெற்றோல் குண்டு வீச்சு நடத்தி வன்முறைக்குழு வாள்களுடன் அட்டகாசம்
யாழ். அச்சுவேலி பாரதி வீதியிலுள்ள வீடொன்றின் மீதும், அச்சுவேலி தென்மூலையிலுள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தின் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
அச்சுவேலிப் பொலிஸார் இந்த தகவலை இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் வாள்கள் சகிதம் இந்த தாக்குதல்களை சில மணி நேரத்துக்குள் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தனிமையிலிருந்த மூதாட்டியின் வீட்டுக் கண்ணாடிகளை அவர்கள் அடித்து உடைத்து, படலையையும் கொத்தி சேதப்படுத்தி, பெற்றோல் குண்டையும் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
அந்த குழு, மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்துக்குள் புகுந்து, அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றையும் வாள்களால் கொத்தி சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



