யாழில் வெசாக் தோரண பந்தல்கள் அமைப்பு! இராணுவத்தினர் துரித நடவடிக்கை (Photos)
சிங்கள மக்களால் புனித முழுமதி பௌர்ணமி வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்துபௌத்த விகாரைகளிலும் மற்றும் பாதுகாப்பு படைத்தலைமைய பிரிவுகளின் அமைவிடங்களிலும் பௌத்தசின்னகொடிகள் மற்றும் வெசாக் தோரணபந்தல்களை அலங்கரிக்கும் பணிகளை யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நேற்று (04.05.2023) யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
இவ் புனித நிகழ்வினை முன்னிட்டு யாழ். ஸ்ரீ நாகவிகாரை மத்தியஸ்தான
விகாரை மற்றும் யாழ். நகர்புற இராணுவ பாதுகாப்பு படைப்பிரிவுகளில் உள்ள
பாதுகாப்பு வேலிகளிலும் பௌத்தசின்ன கொடிகள் மற்றும் வெசாக் தோரண பந்தல்களை
இராணுவத்தினர் மிக ஆர்வத்துடன் அமைத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.











