வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பிரமாண்டமான பட்டத்திருவிழா
யாழ் - வல்வெட்டித்துறையில் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் பட்டத்திருவிழா, இவ்வாண்டும் வெகு விமரிசையாக வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்றுள்ளது.
இன்று (15.01.2023) இடம்பெற்ற இப்பட்டப்போட்டியில் பல வண்ணமய வினோதமான வடிவிலான பட்டங்கள் பறக்கவிடப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியைக் காண்பதற்கு குடாநாட்டின் பல பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.



உரிமையாளர்களுக்கு பரிசில் வழங்கப்பட்டது
இப்போட்டியில் முதலாம் இடத்தை உருமாறும் மர்ம தாக்குதல் விமானத்தை போன்று பட்டத்தை அமைத்த ம.ஹாசன் பெற்றுக்கொண்டார்.
இரண்டாம் இடத்தை உழவு இயந்திரம் மரநடுகை திட்டத்தை போன்று பட்டத்தை அமைத்த ம. பிரசாந் என்பவரும் மூன்றாம் இடத்தை மேள தாளங்களுடன் கூடிய ஆகாய விசித்திர போர்கல அரங்கம் பட்டத்தை அமைத்த நிரோசன் சின்னா என்பவரும் பெற்றுக் கொண்டார்கள்.
முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான சிறப்பு பரிசுகளுடன் பட்டப்போட்டியில் பங்கேற்ற அனைத்து பட்ட உரிமையாளர்களுக்கும் பரிசில்களும் இதன்போது வழங்கப்பட்டன.








கார்க் தீவில் அமெரிக்க இராணுவத்திற்கு காத்திருக்கும் பேராபத்து - ட்ரம்பிற்கு ஈரான் புகட்டப்போகும் வரலாற்றுப் பாடம்
டிரம்பை உன்னிப்பாகக் கவனிக்காத இலங்கை அரசாங்கம்! மூடப்படும் நிலையில் தொழிற்சாலைகள் - பகிரங்க குற்றச்சாட்டு