யாழ். பல்கலைக்கழக மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் இன்றையதினம் (26) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.
கொட்டகல - புனித அன்ருஸ் தோட்டம் என்ற முகவரியைச் சேர்ந்த கருப்பையா கவிரத்தினம் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயர் வையுங்கள்..! பிமலுக்கு சத்தியலிங்கம் பதிலடி
உடற்கூற்று பரிசோதனை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கொக்குவில் - பிரவுண் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்துள்ளார்.

அந்த இளைஞன் யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் குறித்த மாணவனுக்கும் காதலிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்று அதிகாலை அவர் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam