யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 11.03.2024 மற்றும் 18.03.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதங்களின் பிரகாரம் 19.03.2024 முழுநாளும் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை கோரியும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பது என்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றிருந்தது.








365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam