வேரிலிருந்து விழுது வரை! யாழ்.பல்கலைக்கழக பேரணி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கம் முன்னெடுக்கும் "வேரிலிருந்து விழுது வரை" ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு இன்றையதினம் விசேட நடைபவனி இடம்பெற்றுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணி மற்றும் நடைபவனி மேற்கொள்வதற்கு தடை விதித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
நடைபவனி
இதனையடுத்து தேர்தல் சார்ந்த நடைபவனி அல்ல என பொலிஸாருக்கு ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்திய நிலையில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் நடைபவனியில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனையுடன் நடைபவனி இடம்பெற்றது.

பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கம் முன்பாக ஆரம்பித்த நடைபவனி பிரதான நுழைவாயில் ஊடாக சென்று பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலுடாக மீண்டும் கலைப்பீடத்தை வந்தடைந்தது.
நடைபவனியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பல்கலைக்கழக பழைய மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.








 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        