யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணப் (Jaffna) பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (16.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒன்று கூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் திருநெல்வேலி சந்திவரை பேரணியாக சென்று மீண்டும் பல்கலைக்கழகத்தை அடைந்துள்ளனர்.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், “பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு” எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
