யாழ். பல்கலை நிகழ்நிலை பட்டமளிப்பு விழா நாளை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 35ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு நாளைய தினம் நிகழ்நிலையில் நடைபெறவுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இம்மாதம் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவும் கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் காரணமாகப் பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும், அதனை நிகழ்நிலையில் நடத்துவதற்குத் தடை ஏதுமில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியிருந்த நிலையில் மாணவர்களின் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக நாளை நிகழ்நிலைப் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, நிகழ்நிலையில் நாளை காலை 9 மணி முதல் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், கைலாசபதி கலையரங்கில் இரண்டு அமர்வுகளாகப் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
பட்டமளிப்பு விழாவை யாழ். பல்கலைக்கழகத்தின் யுடியூப் மற்றும் முகப்புத்தக பக்கம் ஆகியவற்றினூடாக நேரலை மூலம் பார்வையிட முடியும் எனவும், பட்டம் பெறுபவர்களுக்கு நேரலைக்கான இணைப்புக்கள் தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் துணைவேந்தரின் ஊடகப் பிரிவின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், நாடு வழமைக்குத் திரும்பியதும் மாணவர்களுக்கான சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.





சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
