யாழ். பல்கலைக்கழக மாணவன் போதை மாத்திரைகளுடன் கைது
போதை மாத்திரை மற்றும் தடை செய்யப்பட்ட லேகிய பைகளுடன் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் இன்று (20.12.2023) கோண்டாவில் பகுதியில் உள்ள வாடகை அறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய கோண்டாவில் தொடருந்து கடவைக்கு அண்மையாக பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ள வாடகை அறையை
முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, 55 தடை செய்யப்பட்ட லேகிய பைகளையும். 11 போதை மாத்திரைகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, இதனை விற்பனை செய்யும் நோக்கில் உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 23 வயதான யாழ். பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவன் ஒருவரையே விசேட அதிரடிப் படையினர் கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கோப்பாய் பொலிஸார் மேற்படி மாணவனுக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திருச்சியில் விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான பயணிகள் - செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
