கிளிநொச்சியில் காவலர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்
கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக விவசாய பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ் என்ற 34 வயதுடைய காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தவறி விழுந்து
குறித்த பாதுகாவலர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று கிளிநாச்சி மாவட்ட தடயவியல் பொலிஸ் உத்தியோத்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிபதி, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









