யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு-செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல்15,16 ஆம் திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(14.04.2023) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு நாட்களும் மாலை நேரங்களில் இந்த உணவு திருவிழா இடம்பெறவுள்ளது.
ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ளது.
உணவு திருவிழாவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தவும் உள்ளூர் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பாரம்பரிய உணவு திருவிழாவை மேற்கொள்வதன் மூலம் அருகி வருகின்ற எமது நடைமுறைகள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை எமது இளைய சமுதாயத்திற்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஏனையோருக்கும் அறிமுகப்படுத்த வாய்ப்பாக இருக்கும்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri