மட்டக்களப்பில் இருந்து கருணா குழுவால் வெளியேற்றப்பட்ட யாழ் வர்த்தகர்கள் - சிறையில் சுட்டு கொல்லப்பட்ட கருணாவின் சகா
20024ஆம் ஆண்டு ஜீலை மாதம் 15ஆம் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் வைத்து இரண்டு கருணா குழு உறுப்பினர்கள் சக கைதியொருவரால் சுட்டு கொல்லப்படுகின்றார்கள்.
தீபன் என்று அழைக்கப்பட்ட சரவணமுத்து சாந்தகுமார், மற்றும் சச்சி மாஸ்டர் என்று அழைக்கப்படுகின்ற கணபதி பிள்ளை மகேந்திரன் ஆகியோரே இவ்வாறு சுட்டு கொல்லப்படுகின்றனர்.
சச்சி மாஸ்டர் என்பவர் கருணா குழுவின் மிக முக்கியமான நபராவார். கிழக்கிலிருந்து யாழ் வர்த்தகர்களை வெளியேற்றுவதில் முன்னின்று செயற்பட்ட ஒருவராகவும் குறிப்பிடப்படுகின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்வதற்கு கருணாதரப்பால் களமிறக்கப்பட்ட குழுவின் பொறுப்பாளர்.
சிறையிலிருந்த அவருக்கு கைத்துப்பாக்கி- கைத்தொலைப்பேசி- கைக்குண்டுகள் போன்றவற்றையெல்லாம் வழங்கி ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை அங்கு ஏற்படுத்திக்கொடுத்திருந்த இலங்கை புலனாய்வு பிரிவு அவரை அடிப்படையாக வைத்து மாபெரும் சதிதிட்டங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தது.
இந்த சச்சி மாஸ்டர் தான் சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
சச்சி மாஸ்டர் தொடர்பான மர்மங்களை சுமந்து வருகின்றது உண்மைகள் நிகழ்ச்சி...