தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி(Photos)
எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தபிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் அண்மையில் யாழ்.மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
பல தரப்பினருடன் கலந்துரையாடல்

இதனை தொடர்ந்து மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் உள்ள மதகுருமார், சிவில் அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பினரை நேற்று(27.01.2023) சந்தித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

அவர்கள் தமது போராட்டத்திற்கான அழைப்புக்களை கோரிய நிலையில் வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள் மதகுருமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை
மாவட்டங்களில் மாணவர் ஒன்றியத்தினரால் போராட்டம் தொடர்பான ஆதரவு கோரிய
கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.





மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam