டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிய 12 வயதேயான யாழ். மாணவி!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தான் சிறுக சிறுக சேகரித்த உண்டியல் பணத்தை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேட்டினை தயாரிப்பதற்காக வழங்கிய நெகிழ்வான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், டித்வாத புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் கையேடுகளை தயாரிப்பதற்கான நிதி சேகரிப்பில் வெண்கரம் அமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வந்தனர்.
உதவி
அந்தவகையில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் தரம் 07இல் கல்வி பயிலும் மாணவியான பு.சர்ஜனா என்ற சிறுமி, தனது அன்றாட செலவுகளை தியாகம் செய்து, சிறுக சிறுக சேகரித்த உண்டியல் பணத்தினை கற்றல் கையேடுகளை தயாரிப்பதற்கு வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் நேற்றையதினம்(29.12.2025) வெண்கரம் அமைப்பினர் குறித்த மாணவியின் சமூக நலனை பாராட்டி, அவரை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri