யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தில் இந்தியாவின் 73வது குடியரசு தின நிகழ்வு! (Photos)
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தில் இந்தியாவின் 73வது குடியரசு தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் பதில் துணைதூதுவர் ராம் மகேசினால் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையும் யாழ்.இந்திய பதில் துணைத்தூதுவரால் வாசிக்கப்பட்டது.
அதன்பின்னர் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சுகாதார நடைமுறை பின்பற்றி இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்டளவில் விருந்தினர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கண்டி
கண்டியில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் குடியரசு தின நிகழ்வுகள் இந்திய துணைத்தூதுவர் மாளிகையில் நடைபெற்றது.
இந்திய துணைத்தூதுவர் வைத்தியர் எஸ். அதிரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் அனுஷியா சிவராஜா, சிரேஷ்ட உபதலைவர் சிவராஜா, உப தலைவர் மதியுகராஜா, சட்ட உறுப்பினர் சரவணன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளர் பாரத் அருள்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri