யாழில் மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு பிணை!
யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் தரம் 10 சேர்ந்த மாணவனை தரம் 11ஆம் வகுப்பிற்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர் ஒருவர் தடிகளை கொண்டு தாக்கியதுடன் பின்னர் கையால் முகத்தில் அறைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவன்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் நீதிமன்றத்திற்கு சென்றது.
யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆசிரியரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் முற்படுத்திய நிலையில் ஆசிரியருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதுடன், மீண்டும் வழக்கு எதிர்வரும் தை மாதம் 17ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டது.
யாழில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவரொருவர் யாழ்.வைத்தியசாலையில் அனுமதி |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
