யாழ்ப்பாண சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாதயாத்திரையினருக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வ சந்நிதியான் ஆலயத்திலிருந்து பாரம்பரியமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்திற்க்கு பாதயாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த உணவுப் பொதியானது இன்று (16.05.2024) தருமபுரம் - நெத்தலியாறு கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
பொருட்கள்
இந்த உணவுப் பொதிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் சென்ற சந்நிதியான் ஆச்சிரமத்தினரே தானங்களை வழங்கி வைத்தள்ளனர்.
இதேவேளை கடந்த 12ஆம் திகதி துர்க்காபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்தில், வைத்து தேநீர் பொருட்கள், மருத்துவ பயன்பாட்டிற்குரிய பொருட்கள் போன்றனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.