யாழ். கலாச்சார நிலையத்திற்கு பெயர் சூட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ். கலாச்சார நிலையத்தை யாழ். மாநகரசபைக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும், 'யாழ்ப்பாண பண்பாட்டு நடுவம்' எனப் பெயர் சூட்ட வேண்டும் எனும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை - யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தை 'சரஸ்வதி மஹால்' எனப் பெயர்சூட்ட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியிருந்த நிலையில், யாழ். மாநகர சபை இவ்வாறானதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
யாழ்ப்பாண மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று (16.02.2023) மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றது.
பிரேரணை
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர் சொலமன் சிறில் யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தை மாநகர சபைக்கு வழங்க வேண்டும் எனும் பிரேரணையை சபையில் முன்வைத்தார்.
சபையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களும் இதற்கு சம்மதம் தெரிவிக்க பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒட்டுமொத்தத் தமிழர்களும் கரிநாளாக பிரகடனப்படுத்திய நாளில் இந்தக் கட்டடத்தை கையளிக்கும் நிகழ்வை நடத்தி தங்களுடைய முகத்தில் கரியைப் பூசியுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் மாநகரசபை உறுப்பினர் வை. கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ். கலாச்சார மண்டப கையளிப்பு
இந்நிலையில் இந்தக் கட்டடத்தைக் கையளிக்கும் நிகழ்வில் யாழ். மாநகர முதல்வருக்கு
சரியான முறையில் கௌரவம் வழங்கப்படாததும் தனக்கும், சபைக்கும் மன வேதனையை
ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கலாச்சார நிலையம் மாநகரசபையைத் தவிர்த்து வேறு யாரிடமும் வழங்கப்பட மாட்டாது என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக மாநகர முதல்வர் இ. ஆர்னோல்ட் சபையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
