யாழ். அச்சுவேலியில் மீட்கப்பட்ட சைக்கிள் வாள் முனையில் கொள்ளையடிக்க்கப்பட்டதென தகவல் (Photo)
யாழ். இருபாலை பகுதியில், வாள்முனையில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார்சைக்கிளே அச்சுவேலி பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 14ஆம் திகதி உரிமையாளரின்றி காணப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் பொலிஸாருக்கு அச்சுவேலி மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வாள் முனையில் வழிப்பறி கொள்ளை
அதன் அடிப்படையில் குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த 13ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாள் முனையில் வழிப்பறி கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என கண்டறியப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளை வழிப்பறி செய்த கொள்ளை கும்பல் தொடர்பிலும், மோட்டார்
சைக்கிளை பயன்படுத்தி ஏதேனும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டனரா? என்பது தொடர்பிலும் அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
