கொடுமையான வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்ட மூதாட்டி!! யாழில் கொடூரம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உள்படுத்திய பின் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விரைவில் கைது செய்யப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam