பிரிவினைக்கு இடம்கொடாமல் ஒன்றாய் பயணிப்போம்: யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம் எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று(15.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் துண்டுப் பிரசுர விநியோகமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நல்லிணக்கம் நீடுழி வாழ்க
இதன் போது சிங்கள தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் நீடுழி வாழ்க, இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், தேசிய ஒற்றுமைக்காக போராடுவோம், இனவாதத்தில் சிக்காமலிருப்போம், மீண்டும் ஒருமுறை வேண்டாம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம், தேசிய நல்லிணக்கத்தை மீண்டும் பிரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம், என பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ல் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



