யாழில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை- செய்திதொகுப்பு
ஜனாதிபதி ரணிலின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடப்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் யாழ். பல்கலைக்கழ மாணவன் ஆகியோரை யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நேற்று கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிமன்ற கட்டளையை பொலிஸார் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கியுள்ளனர். கடந்த பொங்கல் தினத்தன்று ஜனாதிபதி ரணிலின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழிப்போராட்டம் இடம்பெற்றது.
பொலிசார் அதை தடுக்க முற்பட்டபோது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 17 ஆம் திகதி தவத்திரு வேலன் சுவாமிகள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட காரணத்தை முன்வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருத்தார். குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி தவணையிடப்பட்டிருத்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்திதொகுப்பு,

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
