யாழில் அரசுக்கெதிராக தொடரும் போராட்டம் (Video)
நாடு முழுவதும் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று நடைபெற்றுவருகின்றன.
அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறுகின்றன.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்றலில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் பிரச்சினை என பல பிரச்சினைகளுக்கு தீர்வினை வேண்டி, கோட்டாபய அரசுக்கு எதிராக, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர் இக் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் மண்ணெண்ணெய், பெட்ரோல், சமையல் எரிவாயு , பாண் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







