யாழ்.மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் வேட்புமனு தாக்கல் விபரங்கள் (Photos)
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள யாழ். மாவட்ட கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தாம் போட்டியிடவுள்ள சபைகளுக்கான வேட்புமனுக்களை நேற்றைய தினம் (21.01.2023) தாக்கல் செய்துள்ளன.
யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் உள்ளூராட்சித்
தேர்தல்களுக்கான தமது வேட்புமனுக்களை கையளித்துள்ளனர்.
ஈழமக்கள் ஜனநாயக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என்பன யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
வேட்புமனு தாக்கல்
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 17 சபைகளுக்கான வேட்புமனுக்களை நேற்றைய தினம் தாக்கல் செய்தது.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 17 சபைகளுக்கான வேட்புமனுக்களை நேற்றைய தினம் தாக்கல் செய்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சி யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 17 சபைகளுக்கான வேட்புமனுக்களை நேற்றைய தினம் தாக்கல் செய்தது.
முன்னாள் யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 12 சபைகளுக்கான வேட்புமனுக்களை நேற்றைய தினம் தாக்கல் செய்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி யாழ்மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 17 சபைகளுக்கான வேட்புமனுக்களை நேற்றைய தினம் தாக்கல் செய்தது.
தமிழ் மக்கள் கூட்டணியினர் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய போதும் 12 சபைகளுக்கான வேட்புமனுக்களை மாத்திரமே தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சி யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 17 சபைகளுக்கான வேட்புமனுக்களை நேற்றைய தினம் தாக்கல் செய்தது.
யாழ் தொகுதி அமைப்பாளர் தீபன் திலீசன் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 17 சபைகளுக்கான வேட்புமனுக்களை நேற்றைய தினம் தாக்கல் செய்தது.
ஊடகச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 17 சபைகளுக்கான வேட்புமனுக்களை நேற்றைய தினம் தாக்கல் செய்தது.
வடக்குமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம் சுயேட்சைக் குழுவாக நல்லூர் பிரதேச சபைகளுக்கான வேட்புமனுவை நேற்றைய தினம் தாக்கல் செய்தது.
தியாகி அறக்கொடை நிர்வாக இயக்குநர் தியாகி.வாமதேவன் தலைமையிலான அணியினர் சுயேட்சைக் குழுவாக யாழ் மாநகரசபைக்கான வேட்புமனுவை நேற்றைய தினம் தாக்கல் செய்தனர்.
மொத்தமாக யாழ் மாவட்டத்திலே 15 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
