யாழ். போதனா வைத்தியசாலை தண்ணீரால் நோயாளிகள் பாதிப்பு: சம்பந்தப்பட்ட அதிகாரி கூறிய கருத்தால் சர்ச்சை (Photos)
யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள குடிநீர் கிணறு மற்றும் நீர்த்தாங்கி என்பவற்றில் பரவிய கிருமித்தாக்கத்தால் திடீரென பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது, அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு திடீரென வயிற்றோட்டம், வாந்திபேதி மற்றும் காய்ச்சல் என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நோய்த்தாக்கம் ஏற்பட்டவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தண்ணீரில் கிருமித் தாக்கம்
வைத்தியசாலையின் தண்ணீரில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இவ்வாறான நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் (16.02.2023) வைத்தியசாலையின் குடிநீர் கிணறு மற்றும் நீர்த்தாங்கி என்பன சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சுத்தம் செய்யப்பட்ட பின்னர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் யாழ். அலுவலகத்தில், வைத்தியசாலையின் தண்ணீர் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அந்த தண்ணீரில் கிருமித்தாக்கம் செறிந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் உண்மையா அல்லது பொய்யா என உறுதிப்படுத்துவதற்காகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் யாழ். அலுவலகத்திற்கு ஊடகவியலாளர் ஒருவரால் தொலைப்பேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அழைப்பில் ஊடகவியலாளர் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு குறித்த விடயத்தினை வினவியுள்ளார், அதற்குத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் யாழ். அலுவலகத்தின் பொது முகாமையாளர் கூறியதாவது,
இது இரகசியம்
"இந்த விடயம் குறித்து என்னிடம் கருத்துக்
கேட்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. நீங்கள் என்ன நோக்கத்திற்காகக்
கேட்கின்றீர்கள் என எனக்குத் தெரியவில்லை. இது இரகசியம் ஆகையால் உங்களுக்குக் கூற
வேண்டிய அவசியம் இல்லை. தகவல் கூற வேண்டுமானால் வைத்தியசாலையின் பணிப்பாளர்
வந்து கூறினால் தான் தகவலை என்னால் வழங்க முடியும்.ஊரவர்களுக்கு எல்லாம்
பதில் சொல்ல வேண்டி அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார்.
அதற்கு அந்த ஊடகவியலாளர் "ஊரவர்கள் அல்ல ஊடகவியலாளர் பேசுகிறேன்" என்று மீண்டும் கூறியவேளை ஊரும் ஊடகமும் ஒன்றுதான்" எனப் பொறுப்பற்ற விதத்தில் பதில் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
உரிய விடயத்தினை மக்களுக்குத் தெரியப்படுத்தி மக்களைப் பாதிப்புக்களிலிருந்து காப்பாற்ற வேண்டியது ஊடகங்களது தலையாய கடமை. அத்துடன், ஊடகங்களுக்கு பொறுப்பு வாய்ந்த விதத்தில் பதிலளிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளது கடமை.
இவ்வாறு அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதால் மக்களுக்கு உண்மை நிலை தெரியாமல் பாதிப்புகள் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் முறைப்பாடு
குறித்த பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் பொறுப்பற்ற பதில் தொடர்பாக, குறித்த ஊடகவியலாளர் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் தொலைப்பேசி வாயிலாக முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப்
பிரிவினர் தெரிவித்துள்ளனர்.







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
