யாழ். வலி - வடக்கில் பொதுமக்களின் 108 ஏக்கர் காணிகள் நாளை விடுவிப்பு
யாழ். வலி - வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய விடுவிக்கப்படவுள்ளன.
பொது மக்களுக்கு சொந்தமான 108 ஏக்கர் காணிகள் நாளைய தினம் (03.02.2023) இராணுவத்தினரால், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் காணி பத்திரங்கள் வழங்கி விடுவிக்கப்படவுள்ளன.
பல்லாண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகளை 2019ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணி விடுவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும்
காணி விடுவிப்பு நிகழ்வில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய பரபரப்பு காட்சிகள்! டிரம்ப் சொன்ன தகவல் News Lankasri