பிரான்ஸ் அபர்வில்லியர்ஸ் மாநகர சபைக்கும் மணிவண்ணன் குழுவுக்கும் இடையில் சந்திப்பு (Photos)
பிரான்ஸ் அபர்வில்லியர்ஸ் (Aubervilliers) மாநகர சபைக்கும் மணிவண்ணன் குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று பிரான்ஸில் இடம் பெற்றுள்ளது.
பிரான்ஸ்க்கு நேற்று முன்தினம் சென்ற மணிவண்ணன் தலமையிலான நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன், யாழ். மாநகர உறுப்பினர் வ.பார்த்தீபன், ஆகியோர் உட்பட்ட குழுவினரே பிரான்ஸ் Aubervilliers மாநகர சபை துணை மேயர் மற்றும் உறுப்பினர்களுடன் இச் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
ஒபேவில்லியே மாநகர சபை பிரதி முதல்வர் மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பான பொறுப்பாளர் ஆகியோருக்கும் இடையிலேயே இச்சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இதில் ஒபேவில்லியே மாநகர சபையின் செயற்பாடுகள், மற்றும் அதனுடைய நிர்வாக அலகுகள், அவற்றை நடைமுறைபடுத்தும் முறை, மற்றும் அதிகார வரம்புகள், தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன் போது யாழ். மாநகர முதல்வர் ஒபேவில்லியே முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு இரு மாநகர சபைகளுக்கும் ஒர் அனுபவ பகிர்வாக அமைந்ததாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.



