கற்கோவளம் இரட்டைக்கொலை: தலைமறைவான மூன்றாவது சந்தேகநபரும் கைது
யாழ். வடமராட்சி, பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இரட்டைக்கொலைகளுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் ஒருவர், 2019ஆம் ஆண்டு குடத்தனையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
கற்கோவளம் ஜே/406 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்துவந்த மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 54) என்ற சலவைத் தொழிலாளியும், அவரது மனைவியான மேரி றீற்ரா (வயது 53) என்பவரும் சித்திரவதை செய்யப்பட்டு கல்லால் குத்திக் கொல்லப்பட்டிருந்தனர்.
தலைமறைவான மூன்றாவது சந்தேகநபர்
பிரதான சந்தேகநபர்களாக மூவர் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதீத குடிவெறி மற்றும் தொழில் போட்டியால் பழிவாங்கும் குரோத உணர்வு என்பவற்றாலேயே இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
