யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் சிறப்பு முத்தழிழ் விழா
யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் "முத்தழிழ் விழா இடம்பெற்றுள்ளது.
துர்க்காதேவி மணி மண்டபத்தில் நேற்று (29.07.2023) ஐ.பி.சி தமிழின் அனுசரணையுடன் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அரசகேசரி விருது வழங்கி வைப்பு
இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ், சிறப்பு விருந்தினர்களாக ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவர் க.பாஸ்கரனுக்கு பதிலாக ஐபிசி தமிழ் முகாமைத்துவ பணிப்பாளர் தி.ராஜன் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில், யாழ் மாநகர சபை கலைத்துறைக்கு வழங்கும் உயரிய விருதான "அரசகேசரி" விருதும் வழங்கப்பட்டது. இதன்படி, இயல் துறைக்காக கலாபூஷணம் கோகிலா மகேந்திரனுக்கும் இசைத்துறைக்கு கலாபூஷணம் எம்.பி.பாலகிருஷ்ணனுக்கும் நாடகத்துறைக்கு கலாபூஷணம் கீர்த்தி சாந்தினி சிவநேசன் ஆகியோருக்கு அரசகேசரி விருதுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
விருதுகள் வழங்கும் நிகழ்வை தொடர்ந்து கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |












