வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் அபகரிக்கப்படும் காணிகள்: கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் தொடா்ந்தும் காணிகள் சட்டவிரோதமாக சுவீகரிக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளாா்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவா், வடக்குகிழக்கில் தனியாா் காணிகள் உட்பட்ட பொதுக்காணிகளும் படையினராலும் சிங்கள மக்களாலும் அபகரிக்கப்படுவதாக குறிப்பிட்டாா்.
அண்மையில் கூட யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியி்ல் 80 போ்ச்சஸ் காணியும், மண்கும்பானில் 70 பேச்சர்ஸ் காணியும் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அவா் சுட்டிக்காட்டினாா்.
கிழக்கில் மட்டக்களப்பு மயிலந்தன்னையில் தமிழா்கள் காணிகள் ,சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பான வழக்கில் நீதிமன்றம் குறித்த அபகாிப்பாளா்களை வெளியேறக்கூறியபோதும் இன்னும் அது இடம்பெறவில்லை என்று கஜேந்திரகுமாா் குறிப்பிட்டாா்.
இதற்கிடையில் வவுனியா நெடுங்கேணியில், கெப்பிட்டிக்கொல்லாவ மற்றும் பதவிய பகுதியில் இருந்து 1030 குடும்பங்கள் குடியமா்த்தப்பட்டுள்ளன.
இது அபிவிருத்தி என்ற போா்வையில் மேற்கொள்ளப்படுகின்றபோது இதனை குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடாகவே அமைந்துள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.
இது தொடா்பில் பேச்சுவாா்த்தை நடத்த,அமைச்சா் ச்சமல் ராஜபக்சவிடம் நேரம் ஒதுக்கிக்கேட்டபோதும், சந்திப்புக்கு நேரம் தரப்பட்டு இறுதிநேரத்தில் இது ரத்துச்செய்யப்பட்டதாக கஜேந்திரகுமாா் தொிவித்தாா்.
